சினிமாவின் மீது படையெடுக்கும் ஹிந்துத்வ தீவிரவாதம்

 

ச‌மீப‌கால‌மாக‌ ஹிந்துத்வ‌ அமைப்புக‌ள் சினிமாவின் மீதும் சினிமா ந‌டிக‌ர், ந‌டிகைய‌ர்க‌ள் மீதும் ஆதிக்க‌ம் செலுத்ததி அனைவரது கவனத்தையும் திருப்ப முயலுகிறது ஹிந்துத்வ வகுப்புவாதம்.

இன்னும் ச‌ற்று கூர்ந்து க‌வ‌னித்தோமானால் த‌மிழ் சினிமாக்க‌ளுக்கு த‌மிழில் பெய‌ர் வைக்க‌ப்ப‌டும் ப‌ட‌ங்க‌ளுக்கு வ‌ரிச்ச‌லுகை அளிக்க‌ப்ப‌டும் என்று முத‌ல்வ‌ர் க‌லைஞ‌ர் அறிவித்த‌பிற‌கு இவ‌ர்க‌ளின் வெறி த‌லைக்கேறியுள்ள‌து.  ச‌ம‌ஸ்கிருத‌ பெய‌ர் வைத்தால்தானே ஆரிய‌ த‌ர்ம‌த்தை காப்பாற்ற‌ முடியும் அதுவும் சினிமா என்ற‌ வ‌லுவான‌ ஊட‌க‌த்தில் செய்ய‌ முடியாவிட்டால் ந‌ம் பாடு தின்டாட்ட‌மாகிவிடுமே என்ற‌ அச்ச‌த்தில் ஆரிய‌ வாத‌ம் இப்பொழுது புதிய‌ யுக்தியை கையிலெடுத்துக்கொன்டுள்ள‌து.  அதுதான் சினிமா ந‌டிகைக‌ளின் உடை முத‌ல் தொட‌ங்கி திரைப்ப‌ட‌ங்க‌ளுக்கு வைக்க‌ப்ப‌டும் பெய‌ர் வ‌ரை நீள்கிற‌து.

சிவாஜி திரைப்ப‌ட‌ விழாவில் ஷ்ரேயாவும் த‌சாவ‌தார‌ம் விழாவில் ம‌ல்லிகா செராவ‌த்தும் ஆபாச‌மாக‌ உடைய‌னிந்து வ‌ந்தார்க‌ள் என‌க்கூறி தேவையில்லாத‌ பிர‌ச்சனைக‌ளை பாசிச‌ அமைப்புக‌ள் கிள‌ப்ப‌வேன்டிய‌ அவ‌சிய‌மென்ன‌ என்று பார்த்தால் மேற்க்கூறிய‌ கார‌ன‌ங்களாக‌வே இருக்கிற‌து.  வ‌ந்திருப்ப‌வ‌ர்க‌ள் அனைவ‌ரும் நிக‌ழ்ச்சியை பார்க்கும் பொழுது இந்துத்வ‌ அமைப்புக‌ளை சேர்ந்தவ‌ர்க‌ள் ம‌ட்டும் ந‌டிகைக‌ளின் உடையை பார்ப்ப‌தேன்.  கோவில் சிற்ப‌ங்க‌ளில் இல்லாத‌ ஆபாச‌ங்களா? அசிங்க‌ங்க‌ளா? 

பாசிஸ்டுக‌ள் இவ‌ற்றை எதிர்க்க‌ கையிலெடுக்கும் ஆயுத‌ம் த‌மிழ‌ க‌லாச்சார‌ம்…  ஆடு ந‌னையுதேன்னு ஓநாய் அழுத‌ க‌தையா இருக்கு….

ஆழ்வார் படத்தில் அஜித் ராமர், கிருஷ்னர் வேடம் போட்டு கொலை செய்ததை எதிர்த்தார்களாம்.  அப்படியென்றால் சினிமாவில் கொலை செய்த ராமரையும் கிருஷ்னருடைய வேஷத்தை எதிர்த்த திம்மிகள் தங்கள் ஆரிய காவியங்களில் உள்ள ராமரையும் கிருஷ்னரையும் எதிர்க்க தயாரா?

எதை எதிர்ப்பது எதை ஆதரிப்பது என்று தெரியாமல் முழிக்கும் ஆரிய கைக்கூலிகளுக்கு கிடைத்திருக்கும் ஒரு கைமாதான் இந்த சினிமா…

One Response to “சினிமாவின் மீது படையெடுக்கும் ஹிந்துத்வ தீவிரவாதம்”

  1. நண்பர்,

    சரியாகச் சொல்லி இருக்கிறீர்கள்.

Leave a Reply